×

சென்னையில் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டம்; டீசல் செலவை குறைக்க நடவடிக்கை..!!

சென்னை: சென்னையில் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தால் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரம் முழுவதும் தினமும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் என பலரும் பேருந்து சேவையை நம்பியுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி பேருந்துகளை இயக்கினால் கூடுதல் மைலேஜ் கிடைக்கும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சோதனை ஓட்டமாக 2 பேருந்துகள் இயற்கை எரிவாயுவில் ஓடுவதுபோல மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் போக்குவரத்து கழகத்திலும் 2 பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளன; விரைவில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்குவதால் டீசல் செலவில் இருந்து 30% குறைக்க முடியும் என்றும் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் மற்ற பேருந்துகளையும் இயற்கை எரிவாயுவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டம்; டீசல் செலவை குறைக்க நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...